தவெக தலைவர் விஜய்க்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார் நயினார் நாகேந்திரன்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக தலைவர் விஜய்யும் இணைய வேண்டும் என்று கடம்பூர் ராஜூ கோரிக்கை விடுத்திருந்தார். அவரின் கோரிக்கைக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் விருப்பம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்கு விஜய்க்கு ஏற்கெனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான பதில் இனிமேல்தான் வரும் என்று நினைக்கிறேன் என தெரிவித்தார்.
பாஜகவை கொள்கை எதிரி என்று தவெக தலைவர் விஜய் தொடர்ந்து விமர்சிர்த்து வரும்நிலையில், அவருக்கு பாஜக அழைப்பு விடுத்து வருவது பெரும் எதிர்பார்ப்பையே எழுப்பி விடுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.