மாணவி ராஜேஸ்வரி | முதல்வர் ஸ்டாலின்.  DIN
தமிழ்நாடு

ஐஐடியில் இடம்பிடித்த மாணவியின் கல்விச் செலவை அரசே ஏற்கும்: முதல்வர்

சென்னை ஐ.ஐ.டி.யில் இடம் பிடித்த பழங்குடியின மாணவிக்கு முதல்வர் வாழ்த்து.

DIN

சென்னை ஐ.ஐ.டி.யில் இடம் பிடித்த பழங்குடியின மாணவியின் உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம், கல்வராயன்மலை கருமந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டி- கவிதா தம்பதியரின் மகள் ராஜேஸ்வரி, ஜே.இ.இ. நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற்று, சென்னை ஐ.ஐ.டி.யில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் தந்தையை இழந்த நிலையில், சாதனை புரிந்த பழங்குடியின மாணவிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"தந்தையை இழந்தாலும், அவர் கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் சல்யூட்!

அவரது உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். ராஜேஷ்வரி போன்ற நமது மகள்கள் மேலும் பலர் சேருவதுதான் ஐஐடி-க்கு உண்மையான பெருமையாக அமையும்! அதற்காக நமது திமுக அரசு தொடர்ந்து உழைக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

SCROLL FOR NEXT