தமிழ்நாடு

பயணிகள் ஆதரவின்மையால் விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு சிறப்பு ரயில் ரத்து!

பயணிகள் ஆதரவின்மையால் விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

DIN

விழுப்புரத்திலிருந்து திருச்சி வழியாக வாரத்துக்கு 4 நாள்கள் இயக்கப்பட்டு வந்த விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு சிறப்பு ரயில் போதிய பயணிகள் ஆதரவின்மை காரணமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோடைக்காலத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும், ஆன்மிக நகரமான ராமேசுவரத்துக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும் விழுப்புரத்திலிருந்து திருச்சி வழியாக மே 2-ஆம் தேதி விரைவு ரயில் இயக்கப்பட்டு வந்தது. வாரத்தில் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் இந்த ரயில் இயக்கப்பட்டது.

விழுப்புரத்திலிருந்து காலை 4.15 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - ராமேசுவரம் விரைவு ரயில் (06105) முற்பகல் 11.40 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும்.

எதிர்வழித்தடத்தில் ராமேசுவரத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்குப் புறப்படும் ராமேசுவரம் -விழுப்புரம் விரைவு ரயில் (06106), இரவு 10.35 மணிக்கு விழுப்புரம் வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டு, தொடர்ந்து ஜூன் 30-ஆம் தேதி வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

விழுப்புரம் -ராமேசுவரம் அதிவிரைவு சிறப்பு ரயிலுக்கு பயணிகள் மத்தியில் போதிய ஆதரவில்லாததன் காரணமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி விழுப்புரத்திலிருந்து ராமேசுவரம் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரயில் (06105) ஜூன் 13, 14, 16, 17, 20, 21, 23, 24, 27, 28, 30 ஆகிய தேதிகளிலும், ராமேசுவரத்திலிருந்து விழுப்புரம் வரை செல்லும் அதிவிரைவு சிறப்பு ரயில் (06106) ஜூன் 9, 10, 13, 14, 16, 17, 20, 21, 23, 24, 27, 28, 30-ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சென்னை புரசைவாக்கத்தில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நினைவுகள்... சுதா

கலைமாமணி விருது பெற்ற திரைக் கலைஞர்கள்! | Tamil Cinema | TNGovt | Award

ஆஸ்திரேலியாவில் சிறியரக விமானம் விபத்து: 3 பேர் பலி

என்ன சுகம் பாடல்!

காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

SCROLL FOR NEXT