முகப்பு
தமிழ்நாடு

பக்ரீத் பண்டிகை: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் பக்ரீத் வாழ்த்து...

Updated On : 6 ஜூன், 2025 at 12:07 PM
முதல்வர் ஸ்டாலின் - கோப்புப்படம்.
பகிர்:

பக்ரீத் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”தியாகத்தையும் பகிர்ந்துண்ணும் பண்பையும் போற்றும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடிடும் இஸ்லாமிய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சகோதரர்கள்.

Advertisement

இஸ்லாமியர்களின் இருபெரும் திருநாள்களில் ஒன்று பக்ரீத். புத்தாடை உடுத்தி, உணவினை வறியவர்க்கு ஒரு பகுதியையும். நண்பர்களுக்கு ஒரு பகுதியையும் பகிர்ந்தளித்துக் கொண்டாடும் பெருநாள்.

இஸ்லாமிய மக்களுக்காக இட ஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை. நங்கநல்லூரில் ஹஜ் இல்லம் என அவர்களின் சமூக கல்வி பொருளாதார உரிமைகளுக்காகத் தொடர்ந்து உழைத்து வரும் சகோதர உணர்வோடு எனது பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.