திருச்செந்தூர் முருகன் கோயில் 
தமிழ்நாடு

ஜூலை 7ஆம் தேதி திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு !

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஜூலை 7-ம் தேதி நடைபெறுகிறது.

DIN

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஜூலை 7-ம் தேதி நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும்.

இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கோவியில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி துவங்கிய இந்தப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தான் முடியும்.

இதைத்தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 7 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கிடையே வைகாசி விசாகத் திருவிழாவும் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதையொட்டி பக்தர்களின் வருகையை கருத்தில்கொண்டு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜுலை 7ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இத்திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடமுழுக்கு விழா 2025 ஆம் ஆண்டு 01-07-2025 முதல் 07-07-2025 முடிய வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

அதில் முக்கிய நிகழ்வான திருக்குட நன்னீராட்டு 07.07.2025 அன்று காலை 06.15 மணிக்கு மேல் 06.50 மணிக்குள் நடைபெறும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT