தமிழ்நாடு

கமலாலயத்தின் கருத்தைக் கூறும் எடப்பாடி பழனிசாமி! அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

தொகுதி மறுசீரமைப்பு குறித்து அதிமுக எந்த வகையிலும் பேசவில்லை என்று அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

DIN

தொகுதி மறுசீரமைப்பு குறித்து அதிமுக எந்த வகையிலும் பேசவில்லை என்று அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.

தொகுதி மறுசீரமைப்பு குறித்து முன்னரே எச்சரித்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.

அவரின் கருத்தை விமர்சித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பூச்சாண்டி வேலையைத்தான் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார் என்று கூறினார்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் கருத்தைக் குறிப்பிட்டு, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பாஜகவுடனான கள்ளக் கூட்டணியை நல்ல கூட்டணியாக்க தில்லிக்கு போனவர், தொகுதி மறுசீரமைப்பு பற்றிப் பேசினேன் என இன்றைக்குப் புதுக்கதை பேசுகிறார்.

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் பாஜகவின் அடிமைபோல் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். ஏதேனும் ஒரு வகையிலாவது, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக அதிமுக பேசியிருக்கிறதா?

மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் பேசினேன் என்று கலர் கலராக ரீல் விடுகிறார் அவர். கமலாலயத்தின் கருத்தை, தன்னுடைய கருத்தாக பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமி வெட்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிஎஸ்டி வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை!

ரேபரேலியில் மாவட்ட வளர்ச்சி கூட்டம்: ராகுல் காந்தி தலைமை தாங்கினார்!

கென் கருணாஸ் இயக்கும் படத்தின் பெயர்!

ஆம் ஆத்மி எம்பியை சந்திக்க முயன்ற முன்னாள் முதல்வர்! தடுத்து நிறுத்திய காவல் துறை!

காயம் காரணமாக ஆரோன் ஹார்டி விலகல்..! புதிய ஆல்-ரவுண்டர் சேர்ப்பு!

SCROLL FOR NEXT