மத்திய அமைச்சர் அமித் ஷா கோப்புப் படம்
தமிழ்நாடு

அமித் ஷா நாளை மதுரை வருகை!

பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள மதுரைக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா நாளை வருகை

DIN

பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள மதுரைக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா நாளை வருகை தரவுள்ளார்.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய பணிகளை கட்சிகள் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், மதுரையில் பாஜக நிர்வாகிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை சந்தித்து பேசவுள்ளார்.

தில்லியில் இருந்து இன்று (ஜூன் 7) மதுரைக்கு இரவு 8.30 மணியளவில் அமித் ஷா வருகைதர உள்ளார். தொடர்ந்து, நாளை (ஜூன் 8) மதுரை ஒத்தக்கடை பகுதியில் பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்.

அதற்கு முன்னதாக, நாளை காலை 11 மணியளவில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்யவிருக்கிறார். தொடர்ந்து, பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்கான பூமிபூஜை, மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், முன்னாள் நிர்வாகிகள் என 15 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமித் ஷாவின் வருகையையொட்டி, மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் கூட்டம் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாதுகாப்பு அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர்.

திமுக பொதுக்குழு கூட்டமும் மதுரையில்தான், கடந்த வாரம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரதட்சிணைக்காக மனைவி எரித்தே கொலை: “இதெல்லாம் சாதாரண விஷயம்” -கணவன் பதில்!

ஃபிளமிங்கோ பூவே... க்ரித்தி ஷெட்டி!

ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

புஜாராவின் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து... சுவாரசியங்கள் சில!

இந்த வாரம் கலாரசிகன் - 24-08-2025

SCROLL FOR NEXT