சிறப்புத் தொழுகை DPS
தமிழ்நாடு

பக்ரீத் திருநாள்: நாமக்கலில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் திருநாளை முன்னிட்டு நாமக்கலில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை நடத்தினர்.

DIN

நாமக்கல்: இஸ்லாமியர்களால் தியாகத் திருநாளாகக் கருதப்படும் பக்ரீத் பண்டிகை நாமக்கலில் சனிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி, நாமக்கல் பேட்டை அஞ்சுமனே இஸ்லாமியா ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் சார்பில் சிறப்புத் தொழுகையானது, நாமக்கல் -சேலம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் சனிக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெற்றது.

முன்னதாக, பேட்டை பள்ளிவாசலிலிருந்து ஈத்கா மைதானம் வரை இஸ்லாமியர்கள் அனைவரும் ஊர்வலமாக வந்தனர். இதனையடுத்து சிறப்பு தொழுகையை, அரசு ஹாஜி சாதிக்பாட்ஷா தொடங்கி வைத்தார். முத்தவல்லி அல் ஹாஜ் கே.தெளலத்கான் முன்னிலை வகித்தார்.

பள்ளிவாசல் தலைமை நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகையில் கலந்து கொண்டனர். மேலும், உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களும் அமைதியாக வாழ வேண்டும் எனத் தொழுகை மேற்கொண்டனர். தொழுகைக்குப்பின் இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டியணைத்து பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

இதேபோல, மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளிவாசல்களிலும் பக்ரீத் சிறப்புத் தொழுகையும், ஏழை இஸ்லாமியர்களுக்கு நல உதவிகளும், குர்பானி கொடுக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - கடகம்

வார பலன்கள் - மிதுனம்

விஜய் வருகை 2026 தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்: பிரேமலதா விஜயகாந்த்

வார பலன்கள் - ரிஷபம்

அர்ஜுன் தாஸின் புதிய பட ரிலீஸ் தேதி!

SCROLL FOR NEXT