பாமக நிறுவனர் ராமதாஸ் கோப்புப்படம்
தமிழ்நாடு

அன்புமணியைச் சந்திக்கும் திட்டமில்லை: சென்னையில் ராமதாஸ் பேட்டி

சென்னையில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி.

DIN

பாமகவில் நிலவும் பிரச்னைகளுக்கு நிச்சயமாக சுமூகத் தீர்வு கிடைக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய ராமதாஸ்,

"மருத்துவப் பரிசோதனைக்காகவே சென்னை வந்துள்ளேன். பல் மருத்துவரைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறேன். யாரையும் சந்திக்க வேண்டும் என்ற திட்டத்தில் சென்னைக்கு வரவில்லை. வேறு எந்தத் திட்டமும் இல்லை.

அன்புமணியுடன் எந்த முரண்பாடும் இல்லை. அவரை சந்திக்கத் திட்டம் எதுவும் இல்லை.

எல்லாவற்றுக்கும் தீர்வு உள்ளது. தீர்வு இல்லாமல் எதுவும் இல்லை. பாமகவில் நிலவும் பிரச்னைகளுக்கு நிச்சயமாக விரைவில் சுமூகத் தீர்வு கிடைக்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும். முடிந்துபோனதை பேச வேண்டாம். இனி நடக்கப்போவதைப் பற்றிப் பேசுவோம்" என்று கூறினார்.

அமித் ஷா வருகையையொட்டி பாஜக - பாமக கூட்டணி உருவாகுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், 'கூட்டணி பற்றி பேசுவதற்கான நேரம் இதுவல்ல. நான் அதைப்பற்றி நினைக்கக்கூட இல்லை. நீங்கள் நினைக்கும் கூட்டணியில் பாமக இருக்கும்' என்றார்.

முகுந்தனுக்கு கட்சி பொறுப்பு பற்றி, 'கட்சியில் நிறைய பொறுப்புகள் உள்ளன. முகுந்தனுக்கு தற்போது கட்சியில் ஆர்வமில்லை. அவர் தொழில் செய்வதில் ஆர்வமாக இருக்கிறார்' என்று தெரிவித்தார்.

மேலும் பாமகவில் கருத்து முரண்பாடுகளினால் வரும் தேர்தலில் பாமகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Vijayக்கும் திமுகவுக்கு ரகசிய தொடர்பு?; திருமா | செய்திகள்: சில வரிகளில் | 02.10.25

அன்பிற்கினியாள் ✨🌸... ரஷ்மிகா!

மகளிர் உலகக் கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் அசத்தல்!

துடரும் இயக்குநரின் புதிய படம் ஆபரேஷன் கம்போடியா!

அவ தான் என்னவ... 🌹🌹😘 கௌரி கிஷன்

SCROLL FOR NEXT