நெல்லையில் 15 நாள்களுக்குப் போராட்டங்களுக்குத் தடை: காவல் ஆணையர்
நெல்லையில் 15 நாள்களுக்குப் போராட்டங்களுக்குத் தடை விதித்து காவல் ஆணையர் உத்தரவு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில், இன்று முதல் 15 நாள்களுக்கு போராட்டங்கள் நடத்த தடை விதித்து மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதி மணி, மாநகரப் பகுதிகளில் பொது அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணும் வகையில், அடுத்த 15 நாள்களுக்கு மக்கள் கூடுதல், கூட்டங்கள், பேரணிகள், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் தடை உத்தரவு சென்னை நகர காவல் சட்டம், 1997, பிரிவு 41(2)-ன் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த உத்தரவு, இன்று (ஜூன் 7, 2025) நள்ளிரவு 00:00 மணி முதல் ஜூன் 21, 2025 அன்று இரவு 24:00 மணி வரை அமலில் இருக்கும்.
இத்தகவலை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.