சென்னையில் பரவலாக மழை 
தமிழ்நாடு

சட்டென்று மாறிய வானிலை: சென்னையில் கொட்டிய மழை!

சென்னையில் திடீர் மழை பெய்ததால் மகிழ்ச்சியில் மக்கள்..

DIN

சென்னையின் பல்வேறு பகுதிகளில் சட்டென்று வானிலை மாறி பரவலாக மழை கொட்டித் தீர்த்தது.

சென்னையில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் நிலவி வந்த நிலையில், காலை 8 மணிக்கு மேல் வெய்யில் வழக்கம்போல் வெளுத்துக்கட்டத் தொடங்கியது.

ஆனால், பிற்பகல் 2 மணிக்கு மேல் வானம் சட்டென்று மாறியது. மேகமூட்டத்துடன் மழைக்கான அறிகுறிகள் தென்பட்ட சற்று நேரத்திலேயே வானம் இருண்டு நல்ல மழைப்பொழிவு ஏற்பட்டது.

சென்னையில் அம்பத்தூர், அன்னாநகர், ஆவடி, கோயம்பேடு, போரூர், கொளத்தூர், பட்டரவாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் சுமார் அரை மணி நேரம் கனமழை வெளுத்துவாங்கியது.

அதோடு தாம்பரம், குரோம்பேட்டை, சேலையூர், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர், ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், கிண்டி, பரங்கிமலை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

அதேசமயம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதியதொரு அத்தியாயம்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT