சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூன் 9) குறைந்துள்ளது. இதனால் மக்கள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை பவுனுக்கு ரூ. 200 குறைந்து ஒரு பவுன் ரூ.71,640க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ. 81 குறைந்து ரூ. 8,955க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.118க்கு விற்பனையாகிறது.
சா்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்துள்ளன. அதுவே திடீா் விலை சரிவுக்கு காரணமாகும். விலை தொடா்ந்து உயா்ந்து வரும்போது, இதுபோன்று திடீரென குறைவது இயல்பான ஒன்றுதான் என்று விலை குறைவு குறித்து சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.