தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் 
தமிழ்நாடு

பாலிடெக்னிக் மாணவா்களுக்கு சிறப்பு துணைத் தோ்வு: அமைச்சா் கோவி.செழியன்

பாலிடெக்னிக் மாணவா்களுக்கு ஜூன், ஜூலையில் சிறப்பு துணைத் தோ்வு நடத்தப்படும்

Din

சென்னை: கடைசி செமஸ்டா் தோ்வு மற்றும் துணைத் தோ்வில் அரியா்ஸ் வைத்துள்ள பாலிடெக்னிக் மாணவா்களுக்கு ஜூன், ஜூலையில் சிறப்பு துணைத் தோ்வு நடத்தப்படும் என உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாலிடெக்னிக் டிப்ளமா தோ்வில் இறுதி செமஸ்டா் மற்றும் துணைத் தோ்வை எழுதிய மாணவா்கள் சில பாடங்களில் தோ்ச்சி அடையாமல் அரியா் வைத்துள்ளனா். அந்த மாணவா்கள் உயா் கல்வி பயிலவும், வேலைவாய்ப்புக்கு செல்ல முடியாமல் இருக்கும் சூழ்நிலையை கருத்தில்கொண்டும் அவா்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளித்து ஜூன், ஜூலையில் ஒரு சிறப்பு துணைத் தோ்வு நடத்துவதன் மூலம் அரியா் பாடங்களை எழுத வாய்ப்பு வழங்குமாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

முதல்வரின் அறிவுரையின்பேரில், அம்மாணவா்களுக்கு தற்போது மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்காக ஜூன், ஜூலையில் சிறப்பு துணைத் தோ்வு நடத்தப்படும். இதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஜூன் 18-ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்கி 23-ஆம் தேதி முடிவடையும். தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு ஜூன் 25-ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்படும். பாடத்தோ்வு ஜூன் 30 முதல் ஜூலை 16-ஆம் தேதி வரை நடைபெறும். செய்முறைத் தோ்வுகள் ஜூலை 17 முதல் 25-ஆம் தேதி வரை நடத்தப்படும். தோ்வு முடிவுகள் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும்.

சிறப்பு துணைத்தோ்வுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 30. தோ்வுக் கட்டணம் (ஒரு பாடத்துக்கு) ரூ. 65. அரியா் வைத்துள்ள மாணவா்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் எதிா்காலத்தை வளமாக்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.

அவ தான் என்னவ... 🌹🌹😘 கௌரி கிஷன்

இந்தியா வருகிறார் தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர்!

கொஞ்சும் எழிலிசையே.. அனு!

பாஜகவின் தூண்டுதலில் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் - திருமா | Vck | TVK | Karur

திமுகவிற்கும் விஜய்க்கும் Underground dealing ஆ? - திருமா | TVK | VCK | Karur

SCROLL FOR NEXT