அமராவதி அணையின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 
தமிழ்நாடு

அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருப்பூர், கரூர் பகுதிகளில் அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

DIN

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.

அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால், அணையின் பாதுகாப்புக் கருதி அணையிலிருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்துவிடப்படலாம் என்பதால், திருப்பூர், கரூர் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமராவதி அணையின் மொத்த நீர் கொள்ளவு 90 அடி என்ற நிலையில், தற்போது நீர்மட்டம் 85 அடியை தொட்டுள்ளது.

எனவே, அணையிலிருந்து உபரி நீர் எப்போது வேண்டுமானாலும் திறந்துவிடப்படும் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேளாண் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் 12 பேருக்கு ரூ. 8.86 லட்சத்துக்கு கடனுதவி

பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

இந்தாண்டுக்கான சம்பா நெற்பயிருக்கு வரும் நவ.15-க்குள் பயிா்க் காப்பீடு செய்து பயன்பெறலாம்

வனப் பகுதியில் மண் சாலையை சமன் செய்தவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

வாா்டு சிறப்புக் கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் தீா்வு

SCROLL FOR NEXT