கோப்புப் படம் 
தமிழ்நாடு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

DIN

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த மணிநேரத்துக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு மாவட்ட கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 20ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... சொந்த மண்ணிலேயே அன்னியரைப் போல...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலைநயம்... சாக்‌ஷி மாலிக்!

முத்து நகை... பாவனா!

ஹிந்துக்கள் ஒருபோதும் பயங்கரவாதிகளாக இருக்கவே மாட்டார்கள்! -அமித் ஷா

சீனாவில் பெய்த கனமழையால் நேபாளத்தில் மீண்டும் வெள்ளம்!

பாஜகவை கேள்வி கேட்க காங்கிரஸுக்கு எந்தவித உரிமையும் இல்லை! -மாநிலங்களவையில் அமித் ஷா

SCROLL FOR NEXT