தவெக தலைவர் விஜய் 
தமிழ்நாடு

மாணவர்களுக்கு விருது விழா! இறுதிக் கட்ட நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்பு!

39 பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் விருது வழங்குகிறார்.

DIN

தமிழகத்தில் 39 பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் கல்வி விருது வழங்குகிறார்.

பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் பரிசளித்து, கௌரவித்து வருகிறார். அந்த வகையில், 2025 ஆம் ஆண்டுக்கான கல்வி விருது விழா 4 கட்டங்களாக நடத்தப்படுகிறது. 3 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இறுதிக்கட்ட நிகழ்வு இன்று நடைபெறுகிறது.

இந்த விழாவில் 39 சட்டப்பேரவை தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விருது, சான்றிதழ் வழங்கி, தவெக தலைவர் விஜய் கௌரவப்படுத்துகிறார்.

முன்னதாக, கல்வி விருது விழாவில் 2026 பேரவைத் தேர்தல் குறித்து பேச வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்த விஜய், தன்னை இளைய காமராஜர் என்று அழைக்க வேண்டாம் என்றும் கூறினார்.

இதனிடையே, கல்வி விருது விழாவில் மாணவிகளை அணைப்பதும், அனுமதியின்றி தொடுவது, முறைகேடாக நடப்பது போன்ற தகாத செயல்களில் தவெக தலைவர் விஜய் ஈடுபடுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி வழக்குரைஞர் சிவமூர்த்தி குற்றம் சாட்டினார். வழக்குரைஞர் சிவமூர்த்தியின் குற்றச்சாட்டுக்கு பலதரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... சொந்த மண்ணிலேயே அன்னியரைப் போல...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓணம் பாரம்பரியம்... மௌனி ராய்!

கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்

ஓணம் ஸ்பெஷல்... சஞ்சனா நடராஜன்!

பாக். முன்னாள் பிரதமரின் சகோதரியின் மீது முட்டை வீச்சு!

ஓணம் ரெடி... ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT