மதிமுக அலுவலகத்தில் தாக்குதல் நடத்திய நபர் படம் - எக்ஸ்
தமிழ்நாடு

மதிமுக அலுவலகத்தில் தாக்குதல்!

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு.

DIN

சென்னை எழும்பூரில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர் இன்று (ஜூன் 16) தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீயணைப்பு வீரர் உடை அணிந்தவாறு, அலுவலகத்தின் உள்ளே நுழைந்து கற்களை வீசியும், மின்விசிறிகளை உடைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் அலுவலகத்தில் இருந்த மேஜை, நாற்காலிகள், மின்விசிறி உள்ளிட்டப் பொருள்கள் சேதமடைந்தன.

தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த காவல் துறையினர், மேலாடையின்றி அரை நிர்வாணமாக அலுவலகத்தின் உள்ளே இருந்த (தாக்குதல் நடத்திய) நபரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இந்தத் தாக்குதல் நடத்தியவர் யார் என்றும், தாக்குதல் நடத்தியதற்கான காரணங்கள் குறித்தும் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மதிமுக அலுவலகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக அக்கட்சி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் மதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க | கடத்தல் வழக்கு: தமிழக ஏடிஜிபி ஜெயராம் கைது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT