முகப்பு
மழை (கோப்புப்படம்)
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழை பெய்யும்!

தமிழ்நாட்டில் மழை நிலவரம் பற்றி...

தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழை பெய்யும்!

தமிழ்நாட்டில் மழை நிலவரம் பற்றி...

Updated On : 17 ஜூன், 2025 at 10:59 AM
மழை (கோப்புப்படம்)
பகிர்:

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு நீலகிரி, கோவை உள்பட 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதாவது இரவு 7 மணி வரை கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்

தமிழ்நாட்டின் நீலகிரி, திருப்பூர், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்

திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →