அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை!
தமிழகத்தில் மழை நிலவரம் பற்றி...
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெய்யில் சுட்டெரித்து வந்த நிலையில் இன்று சென்னை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று(ஏப். 6 ) அடுத்த 3 மணி நேரத்துக்கு (மாலை 4 மணி வரை) சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும்
Advertisement
தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
summary