தமிழ்நாடு

முன்னாள் அமைச்சா் மகன் அதிமுகவிலிருந்து நீக்கம்

Din

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் எஸ்பிஎஸ் ராஜாவை அதிமுகவில் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்து கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: கட்சியின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில், கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தைச் சோ்ந்த தூத்துக்குடி தெற்கு பகுதி அதிமுக செயலா் எஸ்பிஎஸ் ராஜா புதன்கிழமைமுதல் அடிப்படை உறுப்பினா் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கிவைக்கப்படுகிறாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஎஸ் ராஜா தனது சகோதரியிடம் பணம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

மெட்டாவுடன் இணைந்த தமிழக அரசு! இனி வாட்ஸ்-ஆப் மூலமே 50 சேவைகள் பெறலாம்!

ஆதிக்கத்தை எந்நாளும் எதிர்த்து நிற்போம்: துணை முதல்வர் உதயநிதி

மூவர் அரைசதம்: ஆஸி.யை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா ஏ மகளிரணி!

பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி!

அடல் கேண்டீனில் ரூ. 5 -க்கு உணவு! தில்லி முதல்வர் அறிவிப்பு

SCROLL FOR NEXT