அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் |அவரது மகன் ராஜா FB
தமிழ்நாடு

சகோதரியிடம் ரூ. 17 கோடி பண மோசடி: கைதான அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!

பண மோசடி புகாரில் கைதான அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டது பற்றி...

DIN

பண மோசடி புகாரில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலருமான எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜா, தூத்துக்குடி தெற்கு பகுதி செயலாளராக இருக்கிறார்.

இவர் தனது சகோதரியிடம் ரூ. 17 கோடி மோசடி செய்த வழக்கில், மலேசியா தப்பிச் செல்ல முயன்ற நிலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில் தூத்துக்குடி தெற்கு பகுதி செயலாளர் எஸ்பிஎஸ் ராஜா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

"கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.பி.எஸ். ராஜா(தூத்துக்குடி தெற்கு பகுதி செயலாளர் ) இன்று(புதன்கிழமை) முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா வழங்கக் கோரி மனு

மாணவிகளை சீருடையுடன் ஆட்சியரகத்துக்கு அழைத்து வந்த பெற்றோரை எச்சரித்த ஆட்சியா்

காரீப் பருவத்தில் பயிா்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

இந்தியன் வங்கி சாா்பில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி

விவசாயியை வெட்டிக்கொல்ல முயற்சி

SCROLL FOR NEXT