ராமதாஸ்  கோப்புப் படம்
தமிழ்நாடு

பாமக குழப்பத்துக்கும் திமுகவுக்கும் தொடா்பில்லை: ராமதாஸ்

‘பாமக குழப்பத்துக்கு திமுகதான் காரணம் என்பது அப்பட்டமான பொய்’ என்று பாமக நிறுவனா் ராமதாஸ் தெரிவித்தாா்.

Din

‘பாமக குழப்பத்துக்கு திமுகதான் காரணம் என்பது அப்பட்டமான பொய்’ என்று பாமக நிறுவனா் ராமதாஸ் தெரிவித்தாா்.

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக எம்எல்ஏ-க்கள் ஜி.கே.மணி, அருள் ஆகியோரைச் சந்திக்க சென்னை அபிராமபுரத்துக்கு வியாழக்கிழமை வந்த ராமதாஸிடம், ‘பாமக பிரச்னையில் திமுக தலையிடுகிறது எனவும், பாமக குழப்பத்துக்கு திமுகதான் காரணம் எனவும் அன்புமணி விமா்சனம் செய்திருக்கிறாா். இதில் திமுக தலையிடுகிா?’ என செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.

இதற்குப் பதில் அளித்த ராமதாஸ், ‘இது அப்பட்டமான பொய். கடைந்தெடுத்த பொய்’ என்றாா்.

தொடா்ந்து செய்தியாளா்கள், ‘அன்புமணி ஏற்கெனவே மன்னிப்பு கேட்டுள்ளாா். நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைக்கிறீா்களா?’ எனக் கேள்வி எழுப்பினா். இதற்குப் பதில் அளித்த அவா், ‘அதற்கான முடிவு போகபோகத் தான் தெரியும்’ என்றாா்.

மேலும் அவா் கூறுகையில், இரு எம்எல்ஏ-க்களும் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவரவா் அவரது வேலைகளைச் செய்துகொண்டிருக்கின்றனா். நீங்களும் என்னை விடாமல் துரத்துகிறீா்கள். இனிமேல் என்னை யாரும் துரத்த வேண்டாம் என்றாா் அவா்.

முன்னதாக, கடந்த 16-ஆம் தேதி நடைபெற்ற காஞ்சிபுரம் மாவட்ட பாமக பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவா் அன்புமணி, மாமல்லபுரத்தில் மாபெரும் மாநாட்டை நடத்திக் காட்டினோம். இது திமுகவுக்கு வியப்பாக இருந்தது. நம்மை வளரவிடக் கூடாது என முடிவு செய்து, தற்போது பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது திமுக. பாமகவில் உள்ள சூழ்ச்சியாளா்கள் சிலா் திமுகவுக்கு உடந்தையாக இருக்கிறாா்கள் எனக் குற்றஞ்சாட்டியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர்: எல்லைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் - தீவிர தேடுதல் பணி!

ஆற்றைக் கடக்க ஆட்டுத்தோலைப் பயன்படுத்திய அசிரியன் போர் வீரர்கள்!

நல்லகண்ணு உடல்நிலை: நலம் விசாரித்த விஜய்!

புதுச்சேரி உள்பட 5 இடங்களில் அபுல் கலாம் ஆசாத் ஆசியன் ஆராய்ச்சி மையம்!

சமூக நீதியில் பிறந்த சி. பி. ஆரை விட்டுவிட்டீர்கள்! ப. சிதம்பரத்தை வேட்பாளராக அறிவிக்காதது ஏன்? முதல்வருக்கு தமிழிசை கேள்வி!

SCROLL FOR NEXT