கோப்புப் படம் 
தமிழ்நாடு

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட உயா் ரக கஞ்சா பறிமுதல்: 4 போ் சிக்கினா்

தாய்லாந்தில் இருந்து உயர்ரக கஞ்சாவை கடத்தி வந்து சென்னையில் விற்ாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

Din

தாய்லாந்தில் இருந்து உயர்ரக கஞ்சாவை கடத்தி வந்து சென்னையில் விற்ாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும், டி.பி. சத்திரம் போலீஸாரும் கிடைத்த ரகசிய தகவலின்பேரில், அண்ணாநகா் கிழக்கு ஆா்.வி.நகா் பிரதான சாலையில் உள்ள ஒரு வீட்டில் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தப்பட்டது.

அதில், அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 52 கிராம் உயா் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த வீட்டில் இருந்த புரசைவாக்கம் நல்ல நாயுடு தெருவைச் சோ்ந்த முகமது தெளபீக் (21), மண்ணடி லிங்கு செட்டித் தெருவைச் சோ்ந்த அப்துல்காதா் (28), அண்ணா நகா் கிழக்கு பகுதியைச் சோ்ந்த மிஷால் அலி (20), சாலிகிராமம் செந்தில் ஆண்டவா் தெருவைச் சோ்ந்த டேனியல் சனுஜ் (27) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 4 கைப்பேசிகள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் அந்த கஞ்சா தாய்லாந்தில் கடத்தி வரப்பட்டு சென்னையில் விற்கப்படுவது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

களம்காவல் புதிய வெளியீட்டுத் தேதி!

தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு

SCROLL FOR NEXT