கடையடைப்புப் போராட்டம் - கோப்புப்படம் file photo
தமிழ்நாடு

வேலூர் அருகே மா விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர்கள் கடையடைப்பு!

வேலூர் அருகே மா விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

DIN

மா விவசாயிகளுக்கு ஆதரவாக வேலூர் மாவட்டத்தில் பரதராமி பகுதியில் உள்ள அனைத்து வணிகர் சங்கம் சார்பில் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம், தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள பரதராமி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக மா விவசாயம் செய்து வரும் நிலையில் இந்த ஆண்டு அதிக விளைச்சல் இருந்தும் உரிய விலை கிடைக்காததாலும், ஆந்திரத்தில் தமிழக மாங்காய்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாலும் மா விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே தமிழக அரசு மா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மா விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இன்று ஒருநாள் பரதராமி பகுதியில் உள்ள அனைத்து வணிகர் சங்கம் சார்பில் அனைத்து கடைகளையும் அடைத்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தமிழக அரசு விவசாயிகளுக்கு ஏற்றவாறு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் வணிகர்கள் ஒன்று சேர்ந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாகக் கூறி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் வடிகால், கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை

ரயிலில் இருந்து தவறிவிழுந்த பயணியை காப்பாற்றிய காவலருக்கு பாராட்டு

கனரக வாகனங்களை புறவழிச்சாலையில் இயக்க பாமக கோரிக்கை

மருத்துவக் கலந்தாய்வு: 7.5% உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வாய்ப்பு

மொடக்குறிச்சி அருகே லக்காபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

SCROLL FOR NEXT