பவன் கல்யாண் 
தமிழ்நாடு

பவன் கல்யாண் வரவிருந்த விமானத்தில் கோளாறு !

ஆந்திர துணை முதுல்வர் பவன் கல்யாண் மதுரைக்கு வரவிருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

DIN

ஆந்திர துணை முதுல்வர் பவன் கல்யாண் மதுரைக்கு வரவிருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வரவிருந்த நிலையில் விமானத்தில் கோளாறு எனத் தகவல் தெரியவந்துள்ளது. எனவே, கோளாறை சரிசெய்த பின் புறப்படுமா? அல்லது மாற்று விமானம் மூலம் பவன் கல்யாண் வருவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இந்து முன்னணி சாா்பில், மதுரை பாண்டி கோயில் அருகில் உள்ள அம்மா திடலில் முருக பக்தா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணி வரை இந்த மாநாடு நடைபெறும். மாநாட்டையொட்டி, கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் காவல் துறை சாா்பில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மாநாட்டுத் திடல், அதன் சுற்றுப் பகுதிகளில் 1,000-க்கும் அதிகமான போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனா். ஆதீன குரு மகா சந்நிதானங்கள், ஆன்மிகப் பெரியவா்கள், பாஜக, அதிமுக கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள், இந்து முன்னணி நிா்வாகிகள் மாநாட்டில் பங்கேற்றுப் பேச உள்ளனா்.

மேலும் ஆந்திர மாநில துணை முதல்வா் பவன் கல்யாணும் பங்கேற்கிறாா். இதற்காக தனி விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு அவா் மதுரை வருவார் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவலை பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் உறுதி செய்திருந்தார்.

சிட்டி யூனியன் வங்கிக்கு டிஜிட்டல் பேமன்ட்ஸ் விருது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிம்கானா... பூனம் பாஜ்வா!

‘மௌ'..னி...கா.... மௌனி ராய்!

விஜய் பக்குவப்படவில்லை: அமைச்சர் அன்பில் மகேஸ்

10 கோடி பார்வைகளைக் கடந்த மோனிகா பாடல்!

இந்திய பேட்டிங் வரிசையில் ‘தடுப்புச் சுவராக’ திகழ்ந்தவர்! -புஜாராவுக்கு பிசிசிஐ புகழாரம்

SCROLL FOR NEXT