கோப்புப் படம் 
தமிழ்நாடு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

DIN

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

அடுத்த 3 மணிநேரத்தில் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், திண்டுக்கல், கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், திருப்பூர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (ஜூன் 22) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், நாளை முதல் 28- ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | கல்வி மூலம் சாதித்த திருநங்கை: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திரௌபதி அம்மன் கோயிலில் பூணூல் மாற்றி வழிபாடு!

தாம்பரத்தில் அரசு தலைமை மருத்துவமனை: திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

சேதமடைந்த சக்கரத்துடன் தரையிறங்கிய பயிற்சி விமானம்!

ரூ.2,000-க்கு விற்கப்படும் கூலி டிக்கெட்..! நியாயமா இதெல்லாம்?

மோடியால் முடியாததை இந்த மு.க.Stalin சாதித்துவிட்டார் என்ற வயிற்றெரிச்சல் எடப்பாடி பழனிசாமிக்கு

SCROLL FOR NEXT