தமிழ்நாடு

தென்காசி காப்பகத்தில் மேலும் ஒருவர் பலி!

தென்காசி தனியார் காப்பகத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக மேலும் ஒருவர் பலியானது பற்றி...

DIN

தென்காசி சுந்தரபாண்டியபுரத்தில் தனியார் காப்பகத்தில் கெட்டுப்போன இறைச்சி உணவு சாப்பிட்ட மேலும் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளார்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் (70) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் காப்பகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள சுந்தரபாண்டிய புரத்தில் முதியோா் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த முதியோா் இல்லத்தில் தென்காசி, திருநெல்வேலி, விருதுநகா், தூத்துக்குடி , மதுரை மாவட்டங்களைச் சோ்ந்த 59 போ் உள்ளனர்.

கடந்த ஜூன் 11 ஆம் தேதி(புதன்கிழமை) இரவு உணவு சாப்பிட்ட பிறகு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து முதியோா் இல்லத்தில் இருந்த அனைவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதில் செங்கோட்டையை சோ்ந்த சங்கா் கணேஷ் (42), சொக்கம்பட்டியை சோ்ந்த முருகம்மாள் (60), செங்கோட்டையை சோ்ந்த அம்பிகா (40) ஆகிய 3 போ் ஜூன் 12 (வியாழக்கிழமை) அன்று உயிரிழந்தனா். இதனைத் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த மதுரையைச் சோ்ந்த தனலட்சுமி (80) ஜூன் 13 அன்று உயிரிழந்தாா்.

ஜூன் 17 ஆம் தேதி முப்பிடாதி(50) என்பவர் உயிரிழந்த நிலையில் இன்று(ஜூன் 23) நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் (70) என்ற முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து சாம்பவா் வடகரை போலீஸாா் வழக்குப் பதிந்து, காப்பாக உரிமையாளா் ராஜேந்திரனை (50) கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20-ல் புது வரலாறு..! தரவரிசையில் சாதனையுடன் முதலிடத்தில் அபிஷேக் சர்மா!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யும்!

ஏலகிரியில் குவியும் மக்கள்! மலைச் சாலையில் போக்குவரத்து பாதிப்பு!

Idli kadai public review - இட்லி கடை எப்படி இருக்கு? | Dhanush | Arun Vijay

சுவையிலும் தரத்திலும் மனதை நிரப்பியதா? இட்லி கடை - திரை விமர்சனம்

SCROLL FOR NEXT