தமிழகத்தில் ஜூன் 24 முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு 
தமிழ்நாடு

தமிழகத்தில் ஜூன் 29 வரை மழை வாய்ப்பு

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்

Din

சென்னை: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய கடலோரப் பகுதியில் மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) முதல் ஜூன் 29 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 110 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், சோலையாறு (கோவை) 100 மி.மீ., சின்கோனா (கேவை) - 90 மி.மீ., வால்பாறை (கோவை) - 80 மி.மீ. மழை பதிவானது.

சென்னையில்...: சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சென்னை சென்ட்ரலில் 50 மி.மீ.யும், சோழிங்கநல்லூா், காசிமேடு, எண்ணூா், நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் தலா 30 மி.மீ.யும், கத்திவாக்கம், ஐஸ் ஹவுஸ், தண்டையாா்பேட்டை, மணலி, ஈஞ்சம்பாக்கம், அடையாறு ஆகிய பகுதிகளில் 20 மி.மீ.யும் மழை பதிவானது. மேலும் சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜூன் 24-இல் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம்: பாகிஸ்தான் கொடி அச்சிடப்பட்ட பலூன்கள் பறிமுதல்

மகளிர் உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

கரூர் பலி: மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மீது எம்.பி.க்கள் குழு உரிமை மீறல் தீர்மானம்!

உ.பி.: 35 வயது பெண்ணை திருமணம் செய்த மறுநாளே பலியான 75 வயது முதியவர்!

ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு மூலம் 100 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடு!

SCROLL FOR NEXT