விஜய் file photo
தமிழ்நாடு

பிரகாசமான எதிர்காலத்துக்காக ஒன்றிணைவோம்; வாழ்த்தியவர்களுக்கு நன்றி: விஜய்!

பிரகாசமான எதிர்காலத்துக்காக ஒன்றிணைவோம் என்றும் வாழ்த்தியவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.

DIN

சென்னை: திரைப்பட நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு ஏராளமானோர் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்திருந்த நிலையில், வாழ்த்தியவர்களுக்கு விஜய் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

நடிகர் விஜய், ஏராளமான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் நிலையில், அவரது ரசிகர்களும் தவெக கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம், விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில், வாழ்த்து தெரிவித்திருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்த அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உலகெங்கிலும் இருந்து வாழ்த்து மழையை பொழிந்த திரைப்படத் துறை மற்றும் ஊடகத் துறை நண்பர்கள், நலம் விரும்பிகள், என் நெஞ்சில் குடியிருக்கும் தவெக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி.

மக்களுக்கு சேவை செய்வதற்கான எனது பயணத்தை நீங்கள் அளிக்கும் ஆதரவு மேலும் ஊக்குவிக்கிறது என்றும், பிரகாசமான எதிர்காலத்துக்காக நாம் அனைவரும் ஒன்றாக அணிவகுத்துச் செல்வோம் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளிக்கு பெரிய பரிசு காத்திருக்கிறது! பிரதமர் மோடி

சுதந்திர நாள்: நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது! பிரதமர் மோடி

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

இன்று உங்க ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT