கோப்புப்படம் 
தமிழ்நாடு

ஆனி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்!

ஆனி மாத சுபமுகூர்த்த நாளன்று சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்க உத்தரவு.

DIN

ஆனி மாதத்தில் சுபமுகூர்த்த தினத்தன்று அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என்று பத்திரப் பதிவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாள்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் மக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தற்போது ஆனி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான 27.06.2025 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு மக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

எனவே, 27.06.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகள், கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

Summary

TN Registration department announced that Additional tokens will be issued in all Registrars offices in aani month muhoortham day

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாணியம்பாடி: மாவட்ட பாஜக அலுவலகத்தில் இல.கணேசனுக்கு அஞ்சலி

யமுனை நீா்மட்டம் தில்லியில் எச்சரிக்கை அளவைக் கடந்தது!

வடகிழக்கு தில்லியில் மைத்துனா்கள் கொலை வழக்கில் 4 போ் கைது

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா

தலைநகரில் பரவலாக மழை; திருப்தி பிரிவில் காற்றின் தரம்!

SCROLL FOR NEXT