தமிழ்நாடு

திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ. 517 கோடியில் திட்டங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த முடிவுற்ற பணிகள் குறித்து....

DIN

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில்
ரூ.517 கோடி செலவில், 90 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து,
60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,00,168 பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் அரசு விழாக்களில் கலந்து கொள்வதற்காக நேற்று (ஜூன் 25) சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வேலூர் புறப்பட்டுச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காட்பாடி ரயில் நிலையத்தில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

பின்னர், வேலூர், அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில், தரை மற்றும் ஏழு தளங்களுடன் 197 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் வேலூர் மாவட்டத்தில் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 7 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான கூடுதல் கட்டடங்கள்  மற்றும் 2 துணை சுகாதார நிலையங்களுக்கான புதிய கட்டடங்களை முதல்வர் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தி்ருப்பத்தூர் மாவட்டத்தில் முதல்வர் தொடக்கி வைத்த புதிய திட்டங்கள் - முழுவிவரம்.pdf
Preview

அதனைத் தொடர்ந்து, வேலூர் மாவட்ட வருவாய் வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி வசித்து வரும் நபர்களுக்கு ஒருமுறை சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ், நிலங்களை வரன்முறை செய்து 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை முதல்வர் வழங்கினார்.

பின்னர், வேலூர் மாவட்டம், பூதூரில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்து, பயனாளிகளிடம் கலந்துரையாடி, அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

அதன் தொடர்ச்சியாக, இன்றைய நாள் (ஜூன் 26) முதல்வர் ஸ்டாலின் அவர்கள், திருப்பத்தூர் மாவட்டம், மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில், 174 கோடியே 39 லட்சம் ரூபாய் செலவில் 90 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 68 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 273 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 1,00,168 பயனாளிகளுக்கு வழங்கினார்.

Summary

At a government function held in Tirupattur district, Chief Minister Stalin inaugurated 90 completed projects worth Rs. 517 crore, laid the foundation stone for 60 new projects, and provided welfare assistance to 1,00,168 beneficiaries.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2029 தேர்தலிலும் மோடியே பிரதமர் வேட்பாளர்! பாஜகவின் நிலைப்பாட்டுக்கு ஆர்எஸ்எஸ் பதில் என்ன?

அதிமுக திட்டங்களை காப்பி - பேஸ்ட் செய்கிறார் Stalin: EPS | செய்திகள்: சில வரிகளில் | 15.8.25

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணி ராமதாஸ் வருகை! ஏன்?

ஹுமாயூன் கல்லறை வளாகத்தில் மேற்கூரை இடிந்து 5 பேர் பலி!

SCROLL FOR NEXT