நடிகா் கிருஷ்ணா கோப்புப்படம்
தமிழ்நாடு

நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் கிருஷ்ணா போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

DIN

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் கிருஷ்ணா போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவில், நான் எந்த தவறும் செய்யவில்லை, என்னிடம் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்படவில்லை, போதைப்பொருளை பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் மருத்துவ அறிக்கையில் இல்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொகைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகா் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் போலீஸாா் கடந்த திங்கள்கிழமை கைது செய்தனா். விசாரணையில், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் நிா்வாகி பிரசாத், போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த பிரதீப்குமாா் ஆகியோா் மூலமாக கொகைன் போதைப் பொருள் வாங்கியிருப்பது தெரியவந்தது.

மேலும், இந்தக் கும்பலுக்கும் கழுகு திரைப்பட நடிகா் கிருஷ்ணாவுக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நடிகா் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த போலீஸாா் திட்டமிட்டிருந்தனா். ஆனால், அவா் கேரளத்தில் திரைப்பட படப்பிடிப்பில் இருந்ததால் விசாரணைக்கு ஆஜராமல் இருந்தாா். மேலும், அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, தனிப்படையினா் கிருஷ்ணாவை தேடி கேரளத்துக்கு சென்றனா். இந்நிலையில், அவா் தனது வழக்குரைஞருடன் நுங்கம்பாக்கம் போலீஸாா் முன் புதன்கிழமை நண்பகல் ஆஜரானாா். போலீஸாா் ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வைத்து கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தினா்.

இதில், தனக்கு போதைப் பொருள் பழக்கம் கிடையாது, தான் ஏற்கெனவே இதய நோயாலும், இரைப்பை பிரச்னையாலும் பாதிக்கப்பட்டிருப்பதால் போதைப் பொருள் உட்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளாா். மேலும், பிரசாத்துக்கும் தனக்கும் நேரடியான தொடா்பு கிடையாது என்றும் கூறியுள்ளாா்.

மேலும், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என முடிவு வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீகாந்த் உள்ளிட்டோருடனான கிருஷ்ணாவின் உரையாடல் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக கைதாகி எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கிருஷ்ணாவை ஜூலை 10ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Summary

Actor Krishna has filed a bail plea in the Narcotics Control Court.

திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் நாளை ஆலோசனை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹூண்டாய் மோட்டார் நிகர லாபம் 8% சரிவு!

49 வயதில் அம்மாவுக்கு எம்பிபிஎஸ் சீட்! மகளும் பொதுப்பிரிவில் போட்டியில் இருக்கிறார்!

உணவுக்காகத் திரண்ட மக்கள் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்! 46 பேர் கொலை!

பஞ்சாப் நேஷனல் வங்கியின் முதல் காலாண்டு லாபம் 48% சரிவு!

ரஷியாவுடன் வர்த்தகம் செய்வதால் இந்தியா மீது கூடுதல் வரி: வெளிப்படையாக அறிவித்த டிரம்ப்!

SCROLL FOR NEXT