கோப்புப்படம் 
தமிழ்நாடு

கொடைக்கானலில் சுற்றுலாத்தலங்களுக்குச் செல்லத் தடை!

யானைகள் முகாமிட்டுள்ளதால் கொடைக்கானலில் சுற்றுலாத்தலங்களுக்குச் செல்லத் தடை.

DIN

யானைகள் முகாமிட்டுள்ளதால் கொடைக்கானலில் சுற்றுலாத்தலங்களுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப் பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளன. பேரிஜம் ஏரி பகுதியில் முகாமிட்டிருந்த யானைகள், தற்போது சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் பிரதான சாலையில் முகாமிட்டுள்ளது.

இதனால் வனத்துறையினர் தீவிரமாக யானைகளைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பாதுகாப்பு கருதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குணா குகை, மோயர் சதுக்கம், பைன் மர சோலை, பில்லர் ராக், பேரிஜம் ஏரி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tourists have not been allowed in tourist places in Kodaikanal due to elephant encampment.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

திற்பரப்பு அருவியில் குளிக்க 4 வது நாளாகத் தடை!

SCROLL FOR NEXT