லாவகமாக கரையைக் கடக்கும் யானை. 
தமிழ்நாடு

வெள்ளத்தில் சிக்கிய யானை கரையைக் கடக்கும் காட்சி: வைரல் விடியோ!

இணையத்தில் வைரலாகும் வெள்ளத்தில் சிக்கிய யானை கரையைக் கடக்கும் காட்சி.

DIN

வெள்ளத்தில் சிக்கிய யானையானது கரையைக் கடக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி பலரால் பகிரப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரள மாநிலத்திற்குள்பட்ட பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இதனிடையே, இரண்டு நாள்களுக்கு முன்பு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர்வீழ்ச்சிக்கு அருகே செல்லவும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே வெள்ளத்தில் சிக்கிய காட்டுயானையொன்று, பெருக்கெடுத்து ஓடும் ஆற்றின் நீரின் எதிரே போராடிச் சென்று லாவகமாக கரையைக் கடக்கும் காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

வால்பாறையில் வனவிலங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திடீரென வனப்பகுதியை விட்டு காட்டு யானைகள் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு வருவதும் மக்கள் அலறிஅடித்துக் கொண்டு ஓடுவதும் வாடிக்கையாகவுள்ளது.

A video of an elephant trapped in a flood crossing the shore has gone viral on the internet and is being shared by many.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுகூலம் ஏற்படும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

திருவண்ணாமலைக்கு வந்த ஆந்திர பெண் பாலியல் பலாத்காரம்: காவலா்கள் இருவா் கைது

நாளை முதல்வா் ராமநாதபுரம் வருகை

திருமகள் அம்மன் கோயில் நவராத்திரி பெருவிழா

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

SCROLL FOR NEXT