கோப்புப்படம் 
தமிழ்நாடு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

இரவு 7 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

DIN

அடுத்த 2 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று(ஜூன் 28) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இன்று(ஜூன் 28) கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: உள்ளாட்சி அமைப்புகளின் நிதி அதிகார வரம்பு உயர்வு: தமிழக அரசு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸ் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்: மருத்துவமனை அறிக்கை

ஆட்டுக்கார அலமேலு... சாக்சி சவான்

கரூர் பலி: விஜய்யை குற்றவாளி ஆக்கக் கூடாது; அண்ணாமலை

ராமதாஸ், வைகோவை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்!

நீதிமன்ற அனுமதியுடன் செந்தில் பாலாஜி அமைச்சராகலாம்! உச்ச நீதிமன்றம்

SCROLL FOR NEXT