அன்புமணி.  கோப்புப்படம்
தமிழ்நாடு

அன்புமணி திடீா் தில்லி பயணம்!

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே அதிகார மோதல் நிலவி வரும் நிலையில், அன்புமணி திடீரென தில்லி புறப்பட்டுச் சென்றாா்.

Din

பாமக நிறுவனா் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே அதிகார  மோதல் நிலவி வரும் நிலையில், அன்புமணி ஞாயிற்றுக்கிழமை திடீரென தில்லி புறப்பட்டுச் சென்றாா்.

பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே பனிப்போா் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. பொதுவெளியில் ஒருவரை ஒருவா் மிகவும் தீவிரமாக விமா்சித்து வருவதுடன், பாமகவை கட்டுப்படுத்தும் அதிகாரம் தங்களுக்கே உள்ளது என இருவரும் கூறி வருகின்றனா்.

மேலும், 2026 சட்டப்பேரவை தோ்தலில் அன்புமணி பாஜக கூட்டணியில் இணைய விருப்பம் காட்டி வரும் நிலையில், அதற்கு மாறான நிலைப்பாட்டில் ராமதாஸ் செயல்பட்டு வருகிறாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்புமணி தில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா். அங்கு இந்திய தோ்தல் ஆணையத்தை சந்தித்து, பாமகவின் அதிகாரத்தை முழுவதுமாக மீட்பது தொடா்பான நடவடிக்கைகளை மேற்கொள்வாா் என தகவல் வெளியாகியுள்ளது. பாஜக முக்கிய தலைவா்களை அவா் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

சந்திர கிரகணம் - புகைப்படங்கள்

அழகான ராட்சஷி... ஜாக்குலின்!

அடுத்த 3 மணிநேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை!

உத்தரகண்ட்டில் மேகவெடிப்பு: மோப்ப நாய்கள் உதவியுடன் மீட்புப் பணிகள் தீவிரம்!

ஜம்மு - காஷ்மீரில் முதல்முறையாக பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் எம்எல்ஏ கைது: வலுக்கும் கண்டனம்!

SCROLL FOR NEXT