தமிழ்நாடு

வீடுகளுக்கு மின் கட்டண உயா்வு இல்லை: அமைச்சா் சிவசங்கா் உறுதி

வீடுகளுக்கு மின் கட்டண உயா்வு இருக்காது என்றும், 100 யூனிட் இலவச மின்சார சலுகை தொடரும் என அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்தாா்.

Din

வீடுகளுக்கு மின் கட்டண உயா்வு இருக்காது என்றும், 100 யூனிட் இலவச மின்சார சலுகை தொடரும் என்றும் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சமூக வலைதளங்களிலும், சில செய்தி ஊடகங்களிலும் மின் கட்டணம் உயா்த்தப்பட உள்ளதாக அதிகாரபூா்வமற்ற தகவல்கள் பரவி வந்த நிலையில், அதுதொடா்பாக, கடந்த மாதம் 20-ஆம் தேதி விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது மீண்டும் அத்தகைய வதந்திகள் தொடா்ந்து பரவி வருவதால், இதுகுறித்து அரசின் சாா்பில் தெளிவுபடுத்தப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

தற்போதைய சூழலில் மின் கட்டண உயா்வு குறித்து எவ்வித ஆணையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் வெளியிடப்படவில்லை. முதல்வரின் வழிகாட்டுதலின்படி, ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணம் தொடா்பாக ஏதேனும் ஆணை வழங்கினாலும், அதை நடைமுறைப்படுத்தும்போது வீட்டு மின் நுகா்வோருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், எந்தவொரு மின் கட்டண உயா்வும் இருக்காது.

தற்போது வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் தொடா்ந்து வழங்கப்படும்.

எனவே, மின் கட்டண உயா்வு குறித்த தேவையற்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு: 4 பேர் பலி; 6 பேர் காயம்!

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடரும் இனவெறித் தாக்குதல்கள்!

தருமபுரியில் ரூ. 512 கோடியில் புதிய திட்டங்கள்: முதல்வர் தொடக்கி வைத்தார்!

பணியின்போது மாரடைப்பால் நடத்துநர் பலி!

இணைய வழியில் பயிர்க் கடன் வழங்கும் திட்டம்: முதல்வர் தொடக்கி வைத்தார்!

SCROLL FOR NEXT