தவெக தலைவர் விஜய் கோப்புப்படம்
தமிழ்நாடு

அரசியல், கொள்கை எதிரியைத்தவிர யார் வந்தாலும் அரவணைப்போம்: தவெக

கூட்டணி குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் கருத்து.

DIN

அரசியல் எதிரி, கொள்கை எதிரியைத்தவிர யார் வந்தாலும் அரவணைப்போம் என தமிழக வெற்றிக்கழக மாநில கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிறந்தநாளை ஒட்டி இன்று(ஜூன் 30) சேலம் மாவட்ட தவெக சார்பில் சேலம் அரசு மருத்துவமனையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளர் அருள்ராஜ் கலந்துகொண்டு ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான போர்வைகளை வழங்கினார். முன்னதாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அருள்ராஜ், ”தமிழகம் முழுவதும் தளபதியின் கோட்டையாக மாறி வருகிறது. அதில் சேலம் இரும்புக் கோட்டையாக உள்ளது. சேலத்தைப் பொறுத்தவரை மேட்டூர் அணை நிரம்பி தண்ணீர் வந்து கொண்டிருந்தாலும் சேலத்தில் பல வார்டுகளில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது.

பாதாள சாக்கடை திட்டம் பல ஆண்டுகள் முன்பு தொடங்கியும் இதுவரை சீர் செய்யவில்லை; இதனால் வீட்டிற்கு கழிவு நீர் வரும் சூழ்நிலை உள்ளது.

சேலம் பல்வேறு நகரங்களை இணைக்கும் சாலையாக உள்ளது; ஆனால் இதுவரை தொழில் வளர்ச்சி இல்லை. ஆண்ட இரு கட்சிகளும் சேலத்தில் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. தவெக ஆட்சிக்கு வந்தவுடன் சேலம் தலைசிறந்த மாவட்டமாக மாற்றப்படும்" என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், "தமிழகம் முழுவதும் தளபதி சுற்றுப்பயணம் குறித்து வருகின்ற 4 தேதி நடைபெற நடைபெற உள்ள செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்காக கட்சி, சின்னம் இன்னும் விண்ணப்பிக்கவில்லை ; விண்ணப்பித்தவுடன் தெரிவிக்கப்படும். தளபதி விஜய் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டார். இனிமேல் மக்களை சந்திப்பார்.

தளபதி விஜய் வெளியே வராததற்கு காரணம் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற பயம்தான் ; காவல்துறை பாதுகாப்பு அளித்தால் விஜய் வருவார். அரசியல் எதிரி, கொள்கை எதிரியைத்தவிர யார் வந்தாலும் அரவணைப்போம்” என தெரிவித்தார்.

இதையும் படிக்க: 3 ஆண்டுகளாக பூட்டிய அறையில் வாழ்ந்த ஐடி ஊழியர்! காரணம் என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேரடி வரி வசூல் 8% அதிகரித்து ரூ.17.04 லட்சம் கோடியாக உயர்வு!

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

SCROLL FOR NEXT