தவெக தலைவர் விஜய் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தவெக பங்கேற்பு!

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தவெக பங்கேற்பது தொடர்பாக....

DIN

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நாளை (மாா்ச் 5) நடைபெறவுள்ள முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்கிறது.

மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக விவாதிக்க புதன்கிழமை (மாா்ச் 5) நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தமிழக அரசு 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது.

தமிழகத்தில் மொத்தம் 183 கட்சிகள் உள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பதிவு செய்யப்பட்ட 45 கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையும் படிக்க: ஜெர்மனியில் செவிலியர் பணிக்கு 2 லட்சம் ஊதியம்: தமிழக அரசு

இந்த நிலையில், நாளை நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கட்சியின் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த பங்கேற்கிறார்.

இதனிடையே, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழா் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்டக் கட்சிகள் அறிவித்துள்ளன.

அதிமுக, பாமக, தவெக உள்ளிட்டக் கட்சிகள் பங்கேற்க இருப்பதாகவும் அறிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணையம் முழுக்க அகரம் சூர்யா!

ஜார்க்கண்ட் வரலாற்றின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது: மமதா இரங்கல்

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT