முதல்வர் ஸ்டாலின். 
தமிழ்நாடு

உரிமைப் போராட்டம் நடத்தும் சூழலில் தமிழ்நாடு! -முதல்வர் ஸ்டாலின்

உரிமைப் போராட்டம் நடத்தும் சூழலில் தமிழ்நாடு இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

DIN

உரிமைப் போராட்டம் நடத்தும் சூழலில் தமிழ்நாடு இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக, தமிழக அரசின் சாா்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று காலை தொடங்கியது. நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10-ஆவது தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 10 மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மக்கள் நீதி மய்யம், பாமக, தேமுதிக ஆகிய பிரதான கட்சிகள் கலந்துகொண்டுள்ளன. அதேசமயம், பாஜக, நாம் தமிழா், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்த்து 30 ஆண்டுகளுக்கு தற்போது உள்ள எம்.பி.க்கள் எண்ணிக்கையே நீடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

இதையும் படிக்க:இந்தியாவுக்கு 100% வரி விதிக்கப்படும்: என்ன சொல்கிறார் டிரம்ப்?

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் பேசுகையில், “மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி சீரமைப்பை கடுமையாக எதிர்க்கிறோம். உரிமைப் போராட்டம் நடத்தும் சூழலில் தமிழ்நாடு இருக்கிறது.

விகிதாசார அடிப்படையில் தொகுதிகளை உயர்த்துவதோ அல்லது குறைப்பதோ குரல்வளையை நெரிக்கும் செயல். அனைத்துக் கட்சியினரும் எல்லைகளைக் கடந்து செயலாற்ற வேண்டும். தென் மாநில உறுப்பினர்களில் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்.

மக்கள் தொகை குறைவாக இருப்பதால் தமிழ்நாட்டில் எம்.பி.க்கள் எண்ணிக்கை குறைக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இதை ஆணித்தரமாக எதிர்க்க வேண்டும்.

தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கே பாதிப்பாக இருக்கிறது. தமிழ்நாடு எதிர்கொள்ளும் இந்த முக்கியமான பிரச்னைக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். 1971 ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்ட விகிதாச்சார அடிப்படையிலேயே தொகுதிகள் தொடரவேண்டும்.

தொகுதி மறுசீரமைப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: உரிமைப் போராட்டம் நடத்தும் சூழலில் தமிழ்நாடு! -முதல்வர் ஸ்டாலின்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT