சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கோப்புப் படம்
தமிழ்நாடு

நீதிமன்றத்தை அவமதிக்கும் தமிழக அரசு: நீதிபதி அதிருப்தி

நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு அவமதிப்பதாகக் கூறி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி

DIN

நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு அவமதிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது.

பணியிடை நீக்கம் செய்யப்பட்டவருக்கு பணப்பலன்கள் கோருவது தொடர்பான வழக்கு, இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது, தமிழக அரசின் அவமதிப்பு நடவடிக்கை மீதும் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

இதுகுறித்து, நீதிபதி தெரிவித்ததாவது ``நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை தமிழக அரசும் அதிகாரிகளும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற மாட்டோம் என்று தமிழக அரசு உறுதி பூண்டதுபோல தோன்றுகிறது.

கடந்த 2 மாதங்களில் மட்டும் உயர்நீதிமன்ற அமர்வில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, கல்வித் துறையின் மீதுதான் அதிகளவில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் ஆகின்றன’’ என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT