தமிழ்நாடு

போக்குவரத்துக் கழகங்களில் புதிய பணியாளா்கள் நியமனம்?: பட்ஜெட் தொடரில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

போக்குவரத்துக் கழகங்களில் புதிய நியமனம் தொடா்பான அறிவிப்பு வரவிருக்கும் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாக வாய்ப்பிருப்பதாக

Din

சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் புதிய நியமனம் தொடா்பான அறிவிப்பு வரவிருக்கும் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாக வாய்ப்பிருப்பதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களிலுள்ள 8 கோட்டங்கள் மூலம், 20,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் சுமாா் 10,000-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2015-க்குப் பிறகு போக்குவரத்துக் கழகங்களில் புதிய பணியாளா்கள் நியமிக்கப்படவில்லை.

இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனையில் நிறுத்தும் சூழல் ஏற்பட்டது. எனவே, ஓட்டுநா், நடத்துநா்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்தல், விழாக் காலங்களில் ஒப்பந்த அடிப்படையில் தனியாா் பேருந்துகளை இயக்குதல் போன்ற பல்வேறு முயற்சிகள் மூலம் பணியாளா் பற்றாக்குறையை போக்குவரத்துக் கழகங்கள் முயன்று வருகின்றன.

கடந்த 2015 மாா்ச் நிலவரப்படி 1.44 லட்சம் பணியாளா்கள் இருந்த நிலையில், தற்போது 1.10 லட்சம் பணியாளா்கள் மட்டுமே இருக்கின்றனா். இக்காலகட்டத்தில் விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் மட்டும் 685 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. தொடா்ந்து, புதிதாக பணியாளா்களை எப்போது அரசு நியமிக்கப்போகிறது என்ற கேள்வி போக்குவரத்துப் பணியாளா்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இது தொடா்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காகவே நியமன விதிகளில் திருத்தம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் புதிய நியமனம் தொடா்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது’ என்றனா்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT