கோப்புப்படம் 
தமிழ்நாடு

மார்ச் 12-ல் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை.

DIN

மாசி மகத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்துக்கு நாளை மறுநாள்(மார்ச் 12) உள்ளூர் விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.

கும்பகோணம் மகாமக குளத்தில் நடக்க உள்ள மாசி மக தீர்த்தவாரியை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அந்த நாளில் அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் தஞ்சாவூர் மாவட்ட கருவூலமும் மற்றும் சார்நிலைக் கருவூலகங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தூத்துக்குடி, திருச்சிக்கு கூடுதல் விமான சேவைகள்!

இதனை ஈடுசெய்யும் வகையில் மார்ச் மார்ச் 29 ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் மகா மகம் தொடர்புடைய 12 சிவன் கோயில்களில் ஆண்டுதோறும் மாசி மக விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு மார்ச் 12 ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT