செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1,285 கோடியிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று(மார்ச் 11) அடிக்கல் நாட்டினார்.
அதனைத்தொடர்ந்து, ஏற்கெனவே பணிகள் நிறைவடைந்துள்ள திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்த அவர், செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளர்களுக்கு வழங்கினார்.
செங்கல்பட்டுக்கு தமது பிரசார வேனில் வந்தடைந்த முதல்வர் மு. க. ஸ்டாலின், அதன்பின் சிறிது தொலைவுக்கு சாலைகளில் நடந்து சென்று அங்கே அவரை காண திரண்டிருந்த மக்களைச் சந்தித்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
முன்னதாக, திங்கள்கிழமை(மார்ச் 10) செங்கல்பட்டுக்குச் சென்ற முதல்வர் மு. க. ஸ்டாலின் அந்த மாவட்டத்தில் ரூ. 515 கோடி முதலீட்டில் 1,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், உலகத்தரம் வாய்ந்த அமைக்கப்பட்டுள்ள கோத்ரெஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்டஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.