தர்மேந்திர பிரதான் / அன்பில் மகேஸ் பொய்யாமொழி  கோப்புப் படம்
தமிழ்நாடு

தவறான தகவல்களைப் பரப்புவதால் உண்மை மாறாது: அன்பில் மகேஸ்

தவறான தகவல்களை பரப்புவதால் உண்மை மாறாது என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

DIN

தவறான தகவல்களைப் பரப்புவதால் உண்மை மாறாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டதாக தமிழக அரசு வெளியிட்ட கடிதத்தை வைத்து நாடாளுமன்றத்தில் பேசிய தர்மேந்திர பிரதானுக்கு பதிலளிக்கும் வகையில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஆங்கிலத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

மதிப்புக்குரிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு,

தவறான தகவல்களைப் பரப்புவது உண்மையை மாற்றிவிடாது.

தமிழ்நாடு கல்விக் கொள்கையை குறைத்து மதிப்பிடும் தேசிய கல்விக் கொள்கை 2022-ஐ தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

எங்கள் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் இல்லை; 15/3/2024 தேதியிட்ட கடிதத்தில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்பதாகக் கூறவில்லை.

மத்திய அரசின் எல்லா திட்டங்களையும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்க முடியாது. மாநிலத்திற்கு நன்மைதரும் திட்டங்களையே ஏற்கிறோம்.

தமிழ்நாடு அரசின் கல்வி முன்மாதிரியானது; மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பான முறையில் வடிவமைக்கும் திறனுடையது.

உங்களிடம் எங்களுக்கான தேவை என்னவென்றால், இந்தியாவின் பன்முகத்தன்மை பலம் தானே தவிர பலவீனமானது அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மாணவர்களின் நலனுக்கும் எது சிறந்தது என்பதைத் தேர்வு செய்யும் உரிமையை நீங்கள் அங்கீகரிப்பது எங்களுக்கான சிறந்த சேவையாக இருக்கும் எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.87.58ஆக நிறைவு!

நூறு கோடி வானவில்... மாளவிகா மனோஜ்!

இதுவரை இல்லாத பேட்டரி திறன்... விவோ ஒய் 500 சிறப்புகள் என்ன?

மலையாளக் கவிதை... அனுமோள்!

'அவர் என்னுடைய அம்மாவே இல்லை' - பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட இளைஞர் விளக்கம்!

SCROLL FOR NEXT