தமிழ்நாடு

'உடனே குழந்தை பெத்துக்கோங்க.. ஆனால்..' - உதயநிதி பேச்சு!

தொகுதி மறுசீரமைப்பினால் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

DIN

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாட்டு முறையை செயல்படுத்திய தமிழ்நாடு, தற்போது தொகுதி மறுசீரமைப்பினால் வஞ்சிக்கப்படுவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் 72 இணையர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,

"திருமணமானவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். உடனே குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள். ஆனால் நிறைய பெற்றுக்கொள்ளாதீர்கள். அதையும் மத்திய அரசு பார்த்துக் கொண்டிருக்கிறது.

மத்திய அரசு குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தி மக்கள்தொகையைக் குறைக்க வேண்டும் என்று கூறியது. அதனை வெற்றிகரமாக செயல்படுத்தியது தமிழக அரசு. அதனால்தான் இப்போது தண்டிக்கப்படுகிறோம்.

தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வந்தால் தமிழ்நாட்டில் 8 தொகுதிகள் குறைந்துவிடும். ஆனால் குடும்பக் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தாத மாநிலங்கள் இதனால் நன்மை அடையப் போகின்றன. வடமாநிலங்கள் 100 தொகுதிகள் வரை பெறப் போகின்றன.

எனவேதான் குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள், குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களைச் சூட்டுங்கள்" என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பையை வென்றபோது என்ன செய்தீர்கள்? கௌதம் கம்பீருக்கு ஆதரவாக முன்னாள் கேப்டன்!

“திமுக என்னை அழைக்கவில்லை! ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்!” செங்கோட்டையன் பேட்டி | ADMK

ஹாங்காங்: வானுயரக் கட்டடங்களை தீக்கிரையாக்கிய மூங்கில் வலை! அடுத்து என்ன?

சூலூர் அருகே சிறுத்தை நடமாட்டம்! உடனடியாக பிடிக்க பொதுமக்கள் வேண்டுகோள்!

உருவானது டிக்வா புயல்: அதி கனமழை எச்சரிக்கை!

SCROLL FOR NEXT