வைகை, பல்லவன் ரயில்களில் ஒரு முன்பதிவில்லாத பெட்டி இணைப்பு!
முன்பதிவில்லாத பெட்டி இணைப்பு தொடர்பாக...
வைகை மற்றும் பல்லவன் விரைவு ரயில்களில் ஒரு முன்பதிவில்லாத பெட்டி இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மதுரை - சென்னை எழும்பூர் இடையேயான வைகை விரைவு ரயில் மற்றும் சென்னை எழும்பூர் - காரைக்குடி இடையேயான பல்லவன் விரைவு ரயிலில் வரும் மே 11 முதல் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தமிழுக்கு முக்கியத்துவம்! தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில் 'ரூ' குறியீடு!
Advertisement
Advertisement
அதேபோல் மறுவழித்தடத்தில் சென்னை எழும்பூர் - மதுரை இடையேயான வைகை விரைவு ரயில், காரைக்குடி - எழும்பூர் இடையேயான பல்லவன் விரைவு ரயிலில் வரும் மே 12 முதல் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகை மற்றும் பல்லவன் விரைவு ரயிலில் முன்பதிவில்லாத இணைக்கப்படும் நிலையில், இரண்டும் ரயில்களிலும் முன்பதிவு செய்யப்பட்ட தனி இருக்கை வசதி பெட்டி குறைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.