அரசுப் பேருந்து மோதி பலியான தினமணி செய்தியாளர் தர்மராஜ்.  
தமிழ்நாடு

அரசுப் பேருந்து மோதி தினமணி செய்தியாளர் பலி

மதுரை- மேலூர் அருகே அரசுப் பேருந்து மோதி தினமணி செய்தியாளர் தர்மராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

DIN

மதுரை: மதுரை- மேலூர் அருகே அரசுப் பேருந்து மோதி தினமணி செய்தியாளர் தர்மராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்தவர் தர்மராஜ்(58). தினமணி நாளிதழில் மேலூர் பகுதிக்கு செய்தியாளராகப் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில்,மேலூரில் உள்ள அவரது வீட்டுக்கு வியாழக்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.அப்போது, பின்னால் வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து மோதியது. இதில், பலத்த காயமடைந்த தர்மராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மேலூர் போலீசார், தர்மராஜின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் மேலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிமாசலை சூறையாடும் மழை! நிலச்சரிவுக்கு 6 பேர் பலி; 1,150 சாலைகள் துண்டிப்பு!

ரூ.58,100 சம்பளத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரப்பெற்றோம் (03-09-2025)

39 வயதில் ஐசிசி ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதலிடம்! சிக்கந்தர் ராஸா அசத்தல்.!

செப். 5-ல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!

SCROLL FOR NEXT