தங்கம் தென்னரசு  
தமிழ்நாடு

புதிதாக ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்பு!

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மேலும் ஒரு லட்சம் வீடுகள்...

DIN

தமிழகத்தில் புதிதாக ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றி வருகிறார்.

அப்போது புதிதாக ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்று தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

அவர் பேசியதாவது:

கடந்தாண்டு கலைஞர் கனவு இல்லம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2030-க்கும் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக கடந்தாண்டு ஒரு லட்சம் வீடுகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்தாண்டும் புதிதாக மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டும் பணி தொடங்கப்படும். இதற்காக ரூ. 3,500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

மேலும், ஊரகப் பகுதிகளில் பழுதான வீடுகளுக்கு பதிலாக புதிதாக 25,000 வீடுகள் இந்தாண்டு கட்டித் தரப்படும் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாத்தான்குளம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி

கன்னியாகுமரி பள்ளியில் இன்று சாதனைக் குழந்தைகளுக்கு விருது வழங்கும் விழா

அம்பையில் போராட்டத்தில் ஈடுபட முயற்சி

நேரு நா்ஸிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

உடன்குடி கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

SCROLL FOR NEXT