செங்கோட்டையன்  
தமிழ்நாடு

செங்கோட்டையனுடன் அதிமுக நிர்வாகிகள் சமரச பேச்சுவார்த்தை!

அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

DIN

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏ செங்கோட்டையன் பங்கேற்காத நிலையில் அவருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், வரும் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன், வேளாண்மைக்கான பிரத்யேக நிதிநிலை அறிக்கையும் மார்ச் 15 அன்று தாக்கல் செய்யப்பட்டது.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது.


பேரவைத் தலைவர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில் அதுகுறித்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பு சட்டப்பேரவையில் இன்று நடைபெற உள்ளது

இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், அதிமுகவினர் பலர் கலந்துகொண்ட நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.

பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அதுமட்டுமின்றி நேற்று முன்தினம் பேரவைத் தலைவர் அப்பாவுவை தனியே சந்தித்துப் பேசினார்.

முன்னதாக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியதும் கடம்பூர் ராஜு செங்கோட்டையனிடம் பேசிக் கொண்டிருந்தார். செங்கோட்டையனின் வாக்கு முக்கியமானதாகக் கருதப்படும் நிலையில் அவருடன் அதிமுக நிர்வாகிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT